மேலும் செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகள் : கலெக்டர் ஆலோசனை
06-Apr-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கறிக்கோழி வளர்ப்பு கூலியை மறு நிர்ணயம் செய்வதற்கான முத்தரப்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகள், கோழிக்குஞ்சு உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள், கால்நடைதுறை அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கறிக்கோழி வளர்ப்பு கூலியை ரூ.6.50 லிருந்து ரூ.20 ஆக உயர்த்த வேண்டும். கோழிப் பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. கோரிக்கைகளை நிறைவேற்ற, நிறுவன பிரதிநிதிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.கால்நடை துறை உதவி இயக்குனர்கள் சுதா, பாலசுப்ரமணியன், கால்நடை டாக்டர் கந்தசாமி, இணை இயக்குனர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
06-Apr-2025