உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி ;ரங்கநாதபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1.45 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி ராணி,42; கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி. கணவன் வேலாயுதம் சென்னையில் தங்கி பணிபுரிவதால், வீட்டில் ராணி மற்றும் அவரது மகன் மட்டும் உள்ளனர். கடந்த 25ம் தேதி இரவு ராணி மற்றும் அவரது மகன் இருவரும் சாப்பிட்டு விட்டு உறங்கியுள்ளனர்.நேற்று முன்தினம் காலை எழுந்து பார்த்த போது, வீட்டின் பின்புற கதவு உடைந்தும், பீரோ திறந்தும் இருப்பதை கண்டு ராணி அதிர்ச்சியடைந்தார். உடன், பீரோவை பார்த்ததில் அதில் இருந்த 3 சவரன் தங்க நகைகள் , 400 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் என மொத்தமாக ரூ.1.45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, அங்கிருந்த தடயங்களை பார்வையிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை