உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரகண்டநல்லுார் கமிட்டியில் ரூ.53 லட்சம் வர்த்தகம்

அரகண்டநல்லுார் கமிட்டியில் ரூ.53 லட்சம் வர்த்தகம்

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நேற்று 53.26 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது. அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ஆண்டு முழுதும் விளை பொருட்கள் ஏலத்துக்கு வரும் விற்பனை கூடமாகும். தற்போது நெல் அறுவடை நிறைவடைந்த நிலையில், மழையின் காரணமாக மக்காச் சோளம் அறுவடை பாதித்துள்ளது. இந்நிலையில் நேற்று நெல் 640 மூட்டை, வேர்க்கடலை 220, கம்பு 150, மக்காச்சோளம் 750 மூட்டை என 159.58 மெட்ரிக் டன் விளை பொருட்கள் ஏலத்திற்கு வந்தன. இவை 53.26 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி