மேலும் செய்திகள்
மழைக்கு வீடு இடிந்து சேதம்
03-Nov-2024
தியாகதுருகம் : கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்,42; இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.நேற்று காலை சென்னையிலிருந்து தனது சுசுகி பெலெனோ காரில் நிறைமதி வந்தார்.மழை அதிகமாக பெய்ததால் சாலையோர புளிய மரத்தின் கீழே காரை நிறுத்தி இருந்தார்.மதியம் 1:30 மணிக்கு காற்றுடன் மழை பெய்தது அப்போது புளியமரம் வேரோடு சாய்ந்து கார் மீது விழுந்தது. இதில் கார் நொறுங்கியது. நல்வாய்ப்பாக காரில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
03-Nov-2024