மேலும் செய்திகள்
பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு
28-Mar-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சித்தப்பாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த, இரு பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் காலனியை சேர்ந்தவர் வேலு,51; இவருடைய அண்ணன் மகள்களான, வெங்கலத்தை சேர்ந்த கருணாகரன் மனைவி ரேவதி,30; மேலுாரை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி பிரியதர்ஷனி,27; ஆகியோர் கடந்த, 14 ம் தேதி பகல் 2:30 மணியளவில், அவரது வீட்டு கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தினர். மேலும், இருவரும் வேலுவை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
28-Mar-2025