உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்பனை 3 பேர் மீது வழக்கு

மதுபாட்டில் விற்பனை 3 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே 2 இடங்களில் மதுபாட்டில் விற்பனை செய்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறுவங்கூர் காலனியை சேர்ந்த கணேசன் மகன் சுரேஷ் என்பவர் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது. போலீசாரை கண்டதும் சுரேஷ் தப்பிவிட்டார். அங்கிருந்த 7 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1,600 பணத்தை பறிமுதல் செய்த போலீசார், சுரேஷ் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவம் வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் மேற்கொண்ட சோதனையில், கொங்கராயபாளையத்தை சேர்ந்த தமிழரசன் மனைவி பழனியம்மாள், இவரது மகன் பிரவீன்குமார், 29; ஆகிய இருவரும் மதுபாட்டில் விற்பனை செய்வது தெரியவந்தது. இதில், போலீசாரை கண்டதும் பழனியம்மாள் தப்பியோடிவிட்டார். பிரவீன்குமாரை கைது செய்து, அவரிடமிருந்த 30 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை