மேலும் செய்திகள்
பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் மீது வழக்கு
23-Oct-2025
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி சேர்ந்த கமலேஷ் குமார் மனைவி லதா, 51; இவர்களுக்கு சொந்தமாக ராவத்தநல்லுாரில் உள்ள நிலத்தை அளந்து கொடுக்க வருவாய்த்துறையை நாடினார். கடந்த 9ம் தேதி வி.ஏ.ஓ., முன்னிலையில் சர்வேயர் நிலத்தை அளக்கும் போது புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் சுப்பிரமணி மற்றும் அவரது மகன்கள் சுரேஷ், குணசேகர் மற்றும் பெயர் தெரியாத சிலர், அந்த இடம் எங்களுக்கு சொந்தமானது. இடத்தை அளக்க கூடாது என தகராறு செய்தனர். இதனை லதா தனது மொபைல்போனில் வீடியோ எடுக்கும் போது, சுப்பிரமணி தரப்பினர் மொபைல்போனை பிடுங்கி உடைத்தனர். அப்போது, ஆபாசமாக பேசி, மீண்டும் நிலத்திற்குள் வந்தால் கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என்று கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து லதா வடபொன்பரப்பி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சுப்பிரமணி, சுரேஷ், குணசேகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
23-Oct-2025