மேலும் செய்திகள்
சங்கராபுரம் ரோட்டரி சங்க மருத்துவர் தின விழா
03-Jul-2025
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே வாலிபரைத் தாக்கிய ஊராட்சி துணைத் தலைவர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். சங்கராபுரம் அடுத்த ச.செல்லம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் பாரத், 31; அதே ஊரைச் சேர்ந்தவர் சபரி, 36; ஊராட்சி துணை தலைவர். இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. கடந்த 19ம் தேதி காலை 7:00 மணிக்கு சபரியிடம், தங்கள் தெருவிற்கு தண்ணீர் வரவில்லை என்று பாரத் புகார் தெரிவித்துள்ளார் . இதனால் ஏற்பட்ட தகராறில் சபரி, 36; அவரது தம்பி சரவணன், 35; தந்தை அறிவழகன், சரவணன் மனைவி சங்கீதா ஆகியோர் சேர்ந்து பாரத்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பாரத் மனைவி அஞ்சு கொடுத்த புகாரின் பேரில் சபரி உட்பட 4 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
03-Jul-2025