உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இரு தரப்பு தகராறு 5 பேர் மீது வழக்கு

இரு தரப்பு தகராறு 5 பேர் மீது வழக்கு

திருவெண்ணெய் நல்லுார்: உளுந்துார்பேட்டை அருகே முன்விரோத தகராறில் போலீசார் 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த நல்லாளகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 57; ஆடு வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, முருகன் வளர்க்கும் ஆடு பக்கத்து வீட்டில் வசிக்கும் சாரதா என்பவரின் வீட்டிற்கு சென்றது. இதனால் சாரதா, முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இரு குடும்பத்தினரும் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பு புகாரின் பேரில் சாரதா, ராஜவேல், சவிதா, முருகன், பிரியா ஆகிய 5 பேர் மீது திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை