உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சொத்து தகராறில் 6 பேர் மீது வழக்கு

சொத்து தகராறில் 6 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில், 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தை சேர்ந்தவர் இளையாப்பிள்ளை,54; இவரது அண்ணன் மகேந்திரன்,55; இவர்களுக்குள் பூர்வீக நிலம் ஒரு ஏக்கரை பிரிப்பது தொடர்பாக பிரச்னை உள்ளது.இந்நிலையில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் இரு குடும்பத்தினர் இடையே சொத்து பிரச்னை தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இது குறித்து இரு தரப்பிலும் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் மகேந்திரன், அவரது மனைவி லலிதா மற்றொரு தரப்பில் இளையாப்பிள்ளை, அவரது குடும்பத்தினர் அம்பேத்கர், சாமிதுரை, பரமேஸ்வரி உட்பட மொத்தம் 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை