உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முன் விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு

முன் விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் போலீஸ் முன்னிலையில் தாக்கிக் கொண்ட இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சோலை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தைப்பேட்டை, பைபாஸ் சாலை, அய்யனார் கோவில் அருகே இரு தரப்பினர் திட்டி, தாக்கிக் கொண்டிருந்தனர். போலீசார் எச்சரித்தும் கேட்காமல் தாக்கிக் கொண்டனர்.இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் கொடுத்த புகாரின், பேரில் கனகனந்தல் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன்கள் கார்த்திகேயன், 31; சரவணன், 27; ஜெயபால் மகன் நந்தகுமார், 25; டி.கே.மண்டபத்தைச் சேர்ந்த சங்கர், 50; அவரது மகன்கள் ரஞ்சித், 28; பவன்குமார், 26; ஆகிய 6 பேர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ