மேலும் செய்திகள்
சொத்து தகராறில் 6 பேர் மீது வழக்கு
30-May-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் புதுகாலனியை சேர்ந்தவர் ஆனந்த், 35; அதே ஊரை சேர்ந்த வர் சக்கரவர்த்தி, 60; இருவரது குடும்பத்திற்கும், நிலத்தில் வாய்க்கால் பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆனந்தை, சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மணிகண்டன், ஆரமுத்து, எத்திராஜ், வெங்கடேசன், பொன்னுசாமி, பிரவீண்குமார் ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சக்கரவர்த்தி உட்பட 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-May-2025