உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலை அமைக்கும் பணியில் தகராறு தி.மு.க., நிர்வாகிகள் மீது வழக்கு

சாலை அமைக்கும் பணியில் தகராறு தி.மு.க., நிர்வாகிகள் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை : சாலை அமைக்கும் பணியில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் கிராமத்தில் ஊர் பகுதியில் இருந்து ஐயனார் கோவில் வரை 1.5 கி.மீ., துாரத்திற்கு வயல்வெளி சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது.இப்பணியை, மணிக்கண்ணன் எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளரான பாதுார் தி.மு.க., கிளை செயலாளர் வேல்முருகன்,51; பூமி பூஜை செய்தார்.அதனையற்றி அதேப்பகுதியை சேர்ந்த தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் சுந்தரமூர்த்தி,45; சாலை பணியை தடுத்ததால், இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.இதுகுறித்து வேல்முருகன் கொடுத்து புகாரின்பேரில் மாவட்ட கவுன்சிலர் சுந்தரமூர்த்தி, சேதுபதி 37, பாஸ்கர் 32, ஜெகன் 29 ஆகிய நான்கு பேர் மீதும், ஜெகன் கொடுத்த புகாரின் பேரில் வேல்முருகன், பிரகாஷ் 26, புஷ்பராஜ் 24, ஏழுமலை 26 ஆகிய 4 பேர் மீது திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி