மனைவிக்கு துன்புறுத்தல் கணவன் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய கணவன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். சின்னசேலம் அடுத்த கரடிசித்துாரை சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி கனகா, 36; இருவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது. கணவன் ராஜசேகர் கடந்த 3 ஆண்டுகளாக வரதட்சணை கேட்டு மனைவி கனகாவை அடித்து, துன்புறுத்தியுள்ளார். இது குறித்து கனகா அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் ராஜசேகர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.