உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தியாகதுருகம் அருகே ரூ.16.75 லட்சம் மோசடி கும்பகோணத்தைச் சேர்ந்தவர் மீது வழக்கு

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தியாகதுருகம் அருகே ரூ.16.75 லட்சம் மோசடி கும்பகோணத்தைச் சேர்ந்தவர் மீது வழக்கு

தியாகதுருகம், : தியாகதுருகத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 16.75 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.தியாகதுருகம் துணை மின் நிலைய அலுவலக பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன், 54; இவருக்கு, கும்பகோணம் அடுத்த கோட்டையூரைச் சேர்ந்த மணிகண்டன், 48; என்பவர் அறிமுகமானார்.சில மாதங்களுக்கு முன் கண்ணையனை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட மணிகண்டன், தான் வெளிநாட்டில் பலருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் தெரிந்தவர்கள் யாரேனும் வெளிநாடு செல்ல விருப்பம் இருந்தால் வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.இதை நம்பிய கண்ணையன் தனக்குத் தெரிந்த கோகுலரசு, சஞ்சய், சதீஷ், ராஜேஷ், பார்த்தசாரதி ஆகியோர்களை வெளிநாடு அனுப்ப அவர்களிடமிருந்து வாங்கிய 16.75 லட்சம் ரூபாயை மணிகண்டனிடம் கொடுத்துள்ளார்.அதன் பின்னர் பணம் கொடுத்தவர்களை வெளிநாடு அனுப்பாமல் மணிகண்டன் ஏமாற்றினார்.இதுகுறித்து கண்ணையன் அளித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை