மேலும் செய்திகள்
வீட்டை உடைத்து சேதம் 5 பேர் மீது வழக்கு
05-Apr-2025
திருக்கோவிலுார் : திருக்கோவிலூர் அருகே முன் விரோதத்தில் வீட்டை உடைத்து சேதப்படுத்திய தாய், மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருக்கோவிலுார் அடுத்த சோழவாண்டியபுரத்தை சேர்ந்தவர் சேகர் மகன் சக்திவேல், 36; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஜீவா, 24; என்பவருக்கும் இடையே, வீட்டுமனை தொடர்பாக முன் விரோதம் உள்ளது. கடந்த, 9ம் தேதி சக்திவேல் வெளியூர் சென்றார். இந்நிலையில் ஜீவா அவரது தாய் உமா, 54; ஆகிய இருவரும் சக்திவேலுவின் பூர்வீக வீட்டின் பின்பக்க கதவை உடைத்து சேதப்படுத்தி அதிலிருந்து கல் துாண்களை உடைத்தனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சக்திவேலுவின் தாய் அலமேலுவை இருவரும் அசிங்கமாக திட்டி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
05-Apr-2025