உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இடத்தகராறில் மோதல் ஒன்பது பேர் மீது வழக்கு

இடத்தகராறில் மோதல் ஒன்பது பேர் மீது வழக்கு

கச்சிராயபாளையம் : க.அலம்பளம் கிராமத்தில் இடத்தகராறில் தாக்கி கொண்ட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கச்சிராயபாளையம் அடுத்த க.அலம்பளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி சரோஜா 38, இவருக்கும் இவரது அண்ணன் அதே பகுதியைச் சேர்ந்த மூக்கன் மகன் ராயர் 75, என்பவருக்கும் இடம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் இருதரப்பைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்த புகாரில் ராயர், சிவக்குமார், முருகன், சரோஜா, பூங்கொடி, கருப்பையா, மாரியாப்பிள்ளை, டாடாமேரி, நவீனா உள்ளிட்ட 9 பேர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை