மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
15-Oct-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பகண்டை கூட்ரோடு அடுத்த சூ.பள்ளிப்பட்டு சேர்ந்த சந்தோஷ்குமார் மனைவி கவுசல்யா, 28; தனியார் பள்ளி துாய்மை பணியாளர். இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்கீரனுார் சேர்ந்த மணிவாசகம், தனது மருத்துவ உதவிக்காக ஒரு சவரன் நகை மற்றும் ரூ. 60 ஆயிரம் பணம் பெற்று, ஒரு மாதத்தில் திருப்பி தருவதாக கூறினார். கடந்த 6ம் தேதி மீண்டும் கேட்டபோது நகை, பணம் திருப்பி தராமல் மிரட்டினார். இது குறித்து புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் மணிவாசகம், அவரது தாய் வள்ளி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
15-Oct-2025