மேலும் செய்திகள்
தனியார் பஸ் மோதி இளம்பெண் பலி
13-Mar-2025
கச்சிராயபாளையம் : மாதவச்சேரி கிராமத்தில் தகராறில் தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம், நாராயணன் குன்று பகுதியைச் சேர்ந்தவர் முனியன் மகன் ஏழுமலை, 27; இவர் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பிரியாமணி என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கி காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் 40, ராமசாமி ஆகியோர் ஏழுமலையிடம் தகராறு செய்து தாக்கினர்.படுகாயமடைந்த ஏழுமலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இது குறித்த புகாரின் பேரில், பாண்டியன் மற்றும் ராமசாமி மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
13-Mar-2025