உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தண்ணீர் இறைப்பதில் தகராறு 4 பேர் மீது வழக்குப் பதிவு

தண்ணீர் இறைப்பதில் தகராறு 4 பேர் மீது வழக்குப் பதிவு

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே பாசன கிணற்றில் இருந்து தண்ணீர் இறைப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.மாடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 55; விவசாயி. அதே ஊரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 65; இருவருக்குமிடையே பாசன கிணற்றில் தண்ணீர் இறைப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. கடந்த 4ம் தேதி இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இது குறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், முருகன், சுப்ரமணியன் உட்பட 4 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி