மேலும் செய்திகள்
அரசு கல்லுாரி ஆண்டு விழா
05-Apr-2025
கள்ளக்குறிச்சி ;கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வேதியியல் துறையின் மன்ற விழா மற்றும் இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான பிரிவு உபச்சார விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். வேதியியல் துறை தலைவர் தர்மராஜா முன்னிலை வகித்தார்.மாணவர் காமராசு வரவேற்றார். டாக்டர் ஆர்.கே.எஸ் கல்லுாரி வேதியியல் துறை தலைவர் அகமது சுல்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்வில் வேதியியலின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. பேராசிரியர்கள் ராஜ்குமார், ராஜா, கனகராசு, அறிவழகன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். மாணவர் தனுஷ்குமார் நன்றி கூறினார்.
05-Apr-2025