உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கடன் பிரச்னையால் சிக்கன் கடை உரிமையாளர் தற்கொலை

கடன் பிரச்னையால் சிக்கன் கடை உரிமையாளர் தற்கொலை

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கடன் பிரச்சனையால் சிக்கன் கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். உளுந்துார்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர், 50; இவர் சிக்கன் கடை உரிமையாளர். பல்வேறு இடத்தில் வாங்கிய கடன் பிரச்னையால் மன உலைச்சலில் இருந்தார். கடந்த 31ம் தேதி இரவு கடையில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் சங்கரின் உடலை மீட்டு பு.மாம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதி ஊர்வலத்திற்கு தயார் செய்தனர். இதனை அறிந்த உளுந்துார்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் பு.மாம்பாக்கம் சென்று சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை