| ADDED : டிச 01, 2025 05:23 AM
கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமணம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். சமூக நலத்துறை அலுவலர்கள் மணிமேகலை நாச்சியார், விமலா, ஜோதி முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். துாய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, குழந்தை திருமணம் குறித்து விளக்கி கூறி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குழந்தை திருமணம் என்பது சட்ட விரோதமான செயல். இது ஒரு குடும்பத்தின் பிரச்னை மட்டுமல்ல, பெண் குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும் சமூக பிரச்னை. எனவே, பெண்கள் 18 வயது பூர்த்தியடையாமல் திருமணம் செய்து கொள்ள கூடாது. இதை மீறி குழந்தை திருமணம் நடந்தால் அது குறித்த தகவலை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன், சமூக நலத்துறை அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தபட்டது. தொடர்ந்து குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில், பொறுப்பாசிரியை ராகேல்ஜாய்ஸ்மேரி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் சத்தியராஜ் நன்றி கூறினார்.