குழந்தைகள் நலன் பாதுகாப்பு குழு கூட்டம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் இளையராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், போக்சோ சட்டம், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம், குடும்ப வன்முறை சட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த பேசுகையில்; குழந்தைகள் பாதுகாப்புக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அனைத்து பணிகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு குறித்து வரும் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பதுடன், குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டும் என பேசினார்.