மேலும் செய்திகள்
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
15-Nov-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்காக நடக்கவும் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து பிரச்சார இயக்கம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, குழந்தை திருமணம் தடுப்பு, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து குழந்தைகள் தொடர்பான பாதுகாப்பு செயலில் பொதுமக்கள் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
15-Nov-2024