உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இரு தரப்பு மோதல்: 9 பேர் கைது

இரு தரப்பு மோதல்: 9 பேர் கைது

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே இருதரப்பினர் மோதல் தொடர்பாக 26 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 9 பேரை கைது செய்தனர்.வடமருதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் கார்த்திக், 20; மற்றும் அவரது நண்பர்கள் ஏரிக்கரை அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த காட்டுகாலனியைச் சேர்ந்த ஜெயபால் மகன் குமார், 23; கார்த்திக் மீது மோதுவது போல் வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த குமார் அவரது ஆதரவாளர்கள் கஜேந்திரன் மகன் ராகுல், 23; ஏழுமலை மகன் நரசிம்மன், 22; உட்பட 6 பேர் கார்த்திகை தாக்கினார்.இது பற்றி தகவல் அறிந்த வடமருதுாரைச் சேர்ந்த குபேந்திரன் மகன் சுகன், குணசேகர் மகன் பன்னீர்செல்வம், குணா மகன்கள் விக்னேஷ், கவியரசன் உட்பட 20 பேர் காட்டு காலனிக்குள் நுழைந்து அங்கிருந்தித வீடுகளுக்குள் புகுந்து பலரையும் சரமாரியாக தாக்கினர்.இது குறித்து இரு இருப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், 26 பேர் மீது வழக்குப்பதிந்து, 9 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை