உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து

அரசு பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து

கள்ளக்குறிச்சி: பெருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் செல்லம்பட்டு, செங்குறிச்சி, பெரிய சிறுவத்துார், சித்தால், ஏ.குமாரமங்கலம், ஜி.அரியூர் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பள்ளி ஆகியவை, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. இந்நிலையில் பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 182 மாணவர்களில், 181 பேர் தேர்ச்சியடைந்து, 99.5 சதவீதம் பெற்றனர். மேலும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 21 பேர் பெற்றுள்ளனர். இதனையடுத்து அந்த பள்ளி மாணவ மாணவியர், கலெக்டர் பிரசாந்தை சந்தித்தனர். தொடர்ந்து, கலெக்டர் மாணவர்களை வாழ்த்தி பாராட்டினார்.இந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ