கலெக்டர் ஆய்வு
மூங்கில்துறைப்பட்டடு: சாத்தனுார் வலதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணை மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசன வசதி வருகிறது. இந்நிலையில் இங்குள்ள கடுவனூர், இளையாங்கன்னி கூட்ரோடு, மைக்கேல்புரம், மேல் சிறுவலூர் ஆகிய பகுதிகளில் செல்லும், சாத்தனுார் வலது புற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்களை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.கால்வாய்களை துார் வாரமேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். மேலும், விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்தார். ஆய்வின் போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சுகந்தி, உதவி பொறியாளர் முருகேசன் உடன் இருந்தனர்.