மேலும் செய்திகள்
குழந்தைகள் நலன் பாதுகாப்பு குழு கூட்டம்
03-Jul-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு;சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டம் ஒரு வைப்புத் தொகை திட்டம். ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அப்பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம், தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனத்தில் வைப்புத் தொகையாக சேமித்து வைக்கப்படும்.இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்புத் தொகை சேமித்து வைக்கப்படும்.சேமித்து வைக்கப்பட்ட நிதியின் முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ள பெண் குழந்தை 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி மதிப்பெண் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க வருமான சான்று, சாதி, வயது, இருப்பிடம், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சான்று, ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று ஆகியன இருக்க வேண்டும்.குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் அந்த பெண் குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் 2வது பெண் குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, குடும்ப புகைப்படம் ஆகிய சான்றுகளுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
03-Jul-2025