மேலும் செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகள் : அதிகாரிகள் ஆய்வு
19-Jul-2025
மூங்கில்துறைப்பட்டு : ராவத்தநல்லுார் மற்றும் ரங்கப்பனுார் ஊராட்சிகளில் நடக்கும் திட்ட பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார். மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவத்தநல்லுார் ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்படும் வகுப்பறை கட்டிடத்தை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, ரங்கப்பனுார் ஊராட்சியில் உள்ள கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள், முதல்வர் மறு கட்டமைப்பு திட்டம் மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஊராட்சி தலைவர் அர்ச்சனா காமராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், ராதாகிருஷ்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரியதர்ஷினி, பொறியாளர் ஹரி கிருஷ்ணன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் நேரு, வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் சாந்தி, ஊராட்சி செயலாளர் மணிமாறன் உடன் இருந்தனர்.
19-Jul-2025