வன உரிமை சான்று பணிகள் கலெக்டர் ஆய்வு
கச்சிராயபாளையம்: கல்வராயன் மலையில் வன உரிமைச்சான்று பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.கல்வராயன் மலையில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான விவசாய நிலங்களுக்கு வன உரிமைச்சான்று வழங்கும் பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சான்று கோரி மொத்தம் 8,833 பேர் விண்ணப்பித்தனர். அதில் 2,100 பேருக்கு வன உரிமைச்சான்று வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு சான்று வழங்கும் பணி நடக்கிறது. இந்த பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி, பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் சுந்தரம், தாசில்தார்கள் கமலக்கண்ணன், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.