வாசகர்கள் கருத்துகள் ( 1 )
புகார் பெட்டியில் லஞ்சமும் சேர்த்து போட்டால் தான் வேலை நடக்கும்
மேலும் செய்திகள்
சூதாடிய 3 பேர் கைது
25-Sep-2024
சுகாதார சீர்கேடுகள்ளக்குறிச்சி துருகம் சாலை, சேலம் மெயின் ரோடு, கச்சிராயபாளையம் சாலைகளில் இறைச்சி கடைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.நாகராஜன் ருத்ரைய்யன், கள்ளக்குறிச்சி. கழிவுநீர் கால்வாய் தேவைகள்ளக்குறிச்சி நகரில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் தெருக்களில் கழிவுநீர் சூழ்ந்து துர்நாற்றமும், கொசு உற்பத்தியாலும் சுகாதார பாதிப்பும் ஏற்படுகிறது.உஷாகுமாரி வேலாயுதம், கள்ளக்குறிச்சி. பாலத்தில் விளக்கு பொருத்தப்படுமா?திருக்கோவிலுார் புறவழிச் சாலையில் உள்ள உயர்மட்ட பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இரவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.ராஜாராம், திருக்கோவிலுார்.ஆட்டோக்களால் அவதிசங்கராபுரம் பஸ் நிலையத்தில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் ஆட்டோக்களால் பொது மக்கள் மற்றும் பஸ் டிரைவர்கள் அவதியடைகின்றனர்.-ராம்குமார், சங்கராபுரம்.பைக்கில் சிறுவர்கள் சாகசம்சங்கராபுரத்தில் விலை உயர்ந்த பைக்குகளில் சிறுவர்கள் அதிவேகமாக செல்வதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாலாஜி, சங்கராபுரம்.தொடரும் பைக் திருட்டுசங்கராபுரம் பகுதியில் அதிகளவில் பைக் திருட்டு நடக்கிறது. எஸ்.பி., துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோபு, பூட்டை ரோடு, சங்கராபுரம்.மினி டேங்க் பழுதுமூங்கில்துறைப்பட்டு அண்ணா நகரில் மினி டேங்க் மற்றும் கைப்பம்பு பழுதால் குடிநீருக்காக பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.ஸ்டெல்லா மேரி, மூங்கில்துறைப்பட்டு.மாட்டுத்தொழுவமான நுாலகம்மூங்கில்துறைப்பட்டு அடுத்த அருளம்பாடி நுாலக கட்டடம் மாட்டுத் தொழுவமாக மாறி வருகிறது.அந்தோணிசாமி, அருளம்பாடி.
புகார் பெட்டியில் லஞ்சமும் சேர்த்து போட்டால் தான் வேலை நடக்கும்
25-Sep-2024