வெள்ளிமலையில் ரூ. 1.5 கோடியில் போக்குவரத்து பணிமனை கட்டும் பணி
கள்ளக்குறிச்சி; கல்வராயன்மலையில் ரூ.1.50 கோடி மதிப்பில் அரசு போக்குவரத்து பணிமனை கட்டுமான பணி துவக்க விழா நடந்தது. சங்கராபுரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பில் கல்வராயன்மலை வெள்ளிமலையில் அரசு போக்குவரத்து பணி மனை கட்டும் பணி துவக்க விழா நேற்று நடந்தது. பணியை கலெக்டர் பிரசாந்த், உதயசூரியன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். தொடர்ந்து முண்டியூர் கிராமத்திற்கு புதிய பஸ் சேவை துவக்கி வைக்கப்பட் டது. வெள்ளிமலையிலிருந்து முண்டியூருக்கு தினசரி 4 முறை இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அத்துடன் கள்ளக்குறிச்சியிலிருந்து பொட்டியம் வரை இயங்கி வரும் நகர பஸ், தினசரி 2 முறை மாயம்பாடி வரை நீட்டிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜெய்சங்கர், துணை வணிக மேலாளர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.