மாடியில் இருந்து விழுந்த கட்டட தொழிலாளி பலி
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி இறந்தார். திருக்கோவிலுார் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 60; கட்டட தொழிலாளி, இன்று (நவ.,7) காலை 10:15 மணிக்கு திருக்கோவிலுார், வடிவேல் நகரில் உள்ள ஒரு வீட்டில் செய்த வேலைக்கான கூலி வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது, இரண்டாவது மாடிக்குச் சென்ற அவர், அங்கிருந்து தவறி விழுந்ததில் பக்கத்து கட்டடத்தின் காம்பவுண்ட் சுவர் கம்பி குத்தியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். திருக்கோவிலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.