உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கட்டட தொழிலாளி தற்கொலை

கட்டட தொழிலாளி தற்கொலை

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் குடும்ப பிரச்னையால் மனமுடைந்த கட்டட தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ரிஷிவந்தியத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 42; கட்டட தொழிலாளி. வெளிநாட்டில் பணிபுரிந்த இவர், கடந்த 4 மாதத்திற்கு முன் சொந்த ஊரான ரிஷிவந்தியத்திற்கு வந்தார். தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வரும் சிவக்குமார், மனைவி கனகாவை அடித்துள்ளார்.இதனால் கனகா கோபித்துக் கொண்டு கடந்த 3 நாட்களுக்கு முன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால், மனமுடைந்த சிவக்குமார், கடந்த 28ம் தேதி இரவு 9:00 மணிக்கு துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை