உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிட்கோ தொழிற்பேட்டையில் ஆலோசனை கூட்டம்

சிட்கோ தொழிற்பேட்டையில் ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுவனஞ்சூர் சிட்கோ தொழிற்பேட்டையில், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.இதில்,மனை ஒதுக்கப்பட்ட தொழில்முனைவோர்கள் தங்களது நிறுவனத்தை விரைவாக தொடங்குவதற்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு அரசுத்துறைகளின் தடையின்மைச்சான்றுகள், ஒப்புதல்கள் மற்றும் அரசு மானியங்கள் போன்றவற்றை தமிழக அரசின் ஒற்றைச்சாளர இணையதளம் வழியாக செய்து தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அடிப்படை வசதி, சான்றுகள் மற்றும் ஒப்புதல்களை தாமதமின்றி விரைவாக வழங்கவும், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், சிட்கோ கிளை மேலாளர் செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி