மேலும் செய்திகள்
குறைகேட்புக் கூட்டம்533 மனுக்கள் குவிந்தன
03-Jun-2025
கள்ளக்குறிச்சி; சங்கராபுரம் தொகுதியில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மாவட்டத்தில் நகர்ப்புற மற்றம் ஊரகப்பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், மூலம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. தற்போது விளிம்பு நிலையிலுள்ள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், இத்திட்டத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி வரும் 24ம் மற்றும் 25 ம் தேதி சங்கராபுரம் தொகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன், ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில், பொதுமக்களிடம் மனுக்கள் பெறுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மனுக்களுக்கு தீர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் முகாமில் பொதுமக்களிடமிருந்து அதிகளவிலான கோரிக்கை மனுக்கள் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசின் திட்டங்கள், அதனை பெறும் வழிமுறைகள் குறித்த விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்தகுமார்சிங், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
03-Jun-2025