உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு 

மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு 

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட பதிவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத்தில் செயல்படும் 14 மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பு திட்டத்தில் கண்டறியபட்ட அடையாள அட்டை இல்லாத மாற்றுத் திறனா ளிகளுக்கு அக்டோபர் 17 முதல் நவம்பர் 30ம் தேதி வரை தாலுகாக்கள் தோறும் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் அடையாள அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகள், கட்டாயமாக பங்கேற்க ஆவண செய்ய அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி