உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு

ரிஷிவந்தியம்: வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த விழிப்புணர்வு பயிற்சிக்கு தாசில்தார் பாலகுரு தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாமலை, வட்டார இயக்க மேலாளர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நுகர்வோர் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில், நுகர்வோர் சங்க நிர்வாகிகள் மோகன், மணி, சீத்தாபதி, ஆறுமுகம், கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், தனி வருவாய் ஆய்வாளர்கள் கார்மேகம், பழனி, வட்ட பொறியாளர் அய்யனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !