உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளச்சாராயம் விற்றால் நடவடிக்கை : கலெக்டர் எச்சரிக்கை கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் எச்சரிக்கை 

கள்ளச்சாராயம் விற்றால் நடவடிக்கை : கலெக்டர் எச்சரிக்கை கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் எச்சரிக்கை 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பனை மற்றும் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரசாந்த் எச்சரித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திகுறிப்பு;கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சேர்ந்து கள்ளச்சாராயத்தை தடுக்க பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் விழாக்காலங்கள் வர இருப்பதால் சிலர் தவறான வியாபார நோக்கத்தோடு மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, பதுக்கல், கடத்தல் மற்றும் விற்பனை செய்யக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணிக்கவும், அவ்வாறு ஏதேனும் நடந்தால் உடன் காவல் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் எவரும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பனையில் ஈடுபடக் கூடாது. மீறி அதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. அதேபோல், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, பதுக்குவது, கடத்தினாலும் கடும் எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை