உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தற்கொலை முயற்சி

கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தற்கொலை முயற்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், தேவரடியார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் தங்கராசு. இவர் தனது மனைவி தனம் என்பவருடன் புகார் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அங்கு, இருவரும் திடீரென தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி, தற்கொலை செய்ய முன்றனர். உடன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தினர்.இது குறித்து தங்கராசு கூறியதாவது: நானும், மனைவி தனமும் பெங்களூரில் கூலி வேலை செய்கிறோம். எனது மகன் சிலம்பரசன் தேவரடியார்குப்பத்தில் வசிக்கிறார். எங்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த அம்மாமி மகன் பெருமாள் என்பவருக்கும் விளைநிலம் தொடர்பாக பிரச்னை உள்ளது. கடந்த, 4ம் தேதி பெருமாள் தரப்பினர் ஒன்று சேர்ந்து, மகன் சிலம்பரசனை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்தவர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பெருமாள் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த மனுவை விசாரித்த கலெக்டர் பிரசாந்த், போலீசாருக்கு பரிந்துரை செய்தார். தொடர்ந்து, தம்பதியரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை