உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விவசாய கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

விவசாய கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

சங்கராபுரம் :சங்கராபுரம் அருகே கிணற்றில் விழுந்த பசுமாட்டினை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு சேர்ந்த முருகன். இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று காலை வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்குள்ள 50 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு கயிற்றின் மூலம் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய பசுமாட்டினை உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !