உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பேரனுடன் மருமகள் மாயம் மாமனார் போலீசில் புகார்

பேரனுடன் மருமகள் மாயம் மாமனார் போலீசில் புகார்

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே பேரனுடன் மருமகளைக் காணவில்லை என மாமனார், போலீசில் புகார் அளித்துள்ளார்.சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மனைவி நிஷா, 26; கண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 5 வயதில் கனியமுதன் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் நிஷா தனது மகனுடன் தேவபாண்டலத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.இதுகுறித்து அவரது மாமனார் தனகோட்டி அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !