உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம் : தாய் புகார்

மகள் மாயம் : தாய் புகார்

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார். அரகண்டநல்லுார் அடுத்த செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலன் மகள் சிந்துஜா, 18; பிளஸ் 2 படித்துள்ளார். பெற்றோர் சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வரும் நிலையில், சிந்துஜா மற்றும் சகோதரர்கள் பாட்டியுடன் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் வீட்டில் அதிகாலை 1:30 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த சிந்துஜா திடீரென காணாமல் போனார். இது குறித்து அவரது தாய் கலையரசி கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை