உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விவசாயிகள் தொழிலாளர் கட்சி ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொழிலாளர் கட்சி ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் விவசாயிகள் தொழிலாளர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெங்கடேசன், வின்சன்ட், வேலாயுதம், சித்ரா, அன்பழகன் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் ஜெகதீசன், நாகராஜ், குரு நாகலிங்கம் வாழ்த்திப் பேசினர். இந்தி மற்றும் புதிய கல்வி கொள்கையை திணிக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பொன்குமார் பேசுகையில், 'தமிழகத்தில் மத்திய அரசு நடத்தி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்குகு ஆசிரியர்கள் உள்ள நிலையில் தமிழ் மொழி பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லை. 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மொழியை அழிக்க முடியாது. மத்திய அரசு தமிழகத்தில் இந்தி திணிப்பை ஏற்படுத்தினால் தமிழகம் கலவர பூமியாக மாற வாய்ப்புள்ளது'என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை