உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஒன்றிய புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தாலுகா அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.திருக்கோவிலுார் அடுத்த கோமாளூர் கிராமத்தில் ஆதி திராவிட மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், வேங்கூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருக்கோவிலுார் ஒன்றிய புரட்சி பாரதம் கட்சி சார்பில், நேற்று தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ரிஷிவந்தியம் தொகுதி செயலாளர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.மாநில செயலாளர் சிலம்பரசன், மாவட்ட செயலாளர் கோவிந்தன், ஒன்றிய மாணவரணி செயலாளர் அருண்குமார், ஒன்றிய பொருளாளர் சக்கரவர்த்தி, வெங்கூர் கிளை தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ