மேலும் செய்திகள்
மலேரியா தடுப்பு விழிப்புணர்வு
26-Apr-2025
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கள்ளக்குறிச்சி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு காய்ச்சல் தினத்தையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மருத்துவ அலுவலர் சகுந்தலாதேவி தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் விக்னேஷ்வரன் வரவேற்றார். நிகழ்ச்சியில், இளநிலை பூச்சியியல் உதவியாளர் சிட்டிபாபு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி ஆகியோர், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், தடுக்கும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கினர். தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், சுகாதார ஆய்வாளர்கள் கவியரசன், வசந்தன், பாலா, மருந்தாளுநர் சுதா, ஆய்வக நுட்புனர் ஜெயந்தி, களப்பணியாளர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
26-Apr-2025