உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உளுந்துார்பேட்டையில் வளர்ச்சி திட்டப் பணி: கலெக்டர் ஆய்வு

உளுந்துார்பேட்டையில் வளர்ச்சி திட்டப் பணி: கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.அதில், பிடாகம் ஊராட்சியில் 9 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கிணறு அமைத்தல் பணி, 22 லட்சம் ரூபாயில் புதிய நுாலக கட்டடம், ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான 2 கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணிகள் மற்றும் கீழப்பாளையம், மூலசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் திட்டப்பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்த முடிக்க அறிவுறுத்தினார்.மேலும் அரசின் திட்டப் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பயனாளிளுக்கு அரசு சிமென்ட் சீராக விநியோகிக்க அறிவுறுத்தினார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை