அரசு மருத்துவ கல்லுாரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கான நேரடி சேர்க்கை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுக்கான நேரடி சேர்க்கை வரும் நவ., 14ம் தேதி நடக்கிறது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரியில் மருத்துவம் சார்ந்த ஒராண்டு சான்றிழ் பாடப்பிரிவுகளான எமர்ஜென்சி டெக்னீசியன், டயாலிஸிஸ் டெக்னீசியன், தியேட்டர் டெக்னீசியன், ஆர்தோபெடிக் டெக்னீசியன், மல்டி பர்ப்பஸ் ஹாஸ்பிட்டல் ஒர்க்கர் உள்ளது. இதில், டயாலிஸிஸ் டெக்னீசியன் பிரிவில் 5 இடங்கள், ஆர்தோபெடிக் டெக்னீசியன் பிரிவில் 5 இடங்கள், மல்டிபர்ப்பஸ் ஹாஸ்பிட்டல் ஒர்க்கர் பிரிவில் 14 இடங்கள் என மொத்தம் 24 காலியிடங்கள் உள்ளது. விண்ணப்பதாரர்கள் வரும் ஆக., 31 அன்று 17 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு மற்றும் மேல்நிலைப் பள்ளி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சேர்க்கையில் மாற்றுத்திறனாளிளுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படும். பாடப்பிரிவு சேர்க்கைக்கு முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப் படும். இவ்வாறு அதில் உள்ளது.