மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முத்துவேல், ஒன்றிய தலைவர்கள் செல்வம், வைத்தியலிங்கம், ஒன்றிய செயலாளர் மாய கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் வேலு, முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாட்கள் தொடர் வேலை; குறைவில்லாமல் முழு ஊதியம்; கடந்த 6 வாரங்களாக குறைவான ஊதியம் வழங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கு இழப்பு ஏற்பட காரணமாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை; என்பன உள்ளிட்ட பல்வேறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.